Jamal Sheik's Blog - ஜமால் சேக் இணையப்பக்கம்
About Me

My Grandfather used to write his own folk lore songs, and get it printed and selling it in weekend markets. He used to advertise his songs books by singing them to the crowd. This is in addition to his Vegetable seller role. Though selling songs books never met his family needs, but he found satisfaction in writing & singing. My father is the last and 10th child to my grandfather. None of my father’s siblings were proficient in Poetry or Song or Writing, except my Father.

My Father is well known as Aranthai Thirumaran to Tamil Literature  Community, can be found in many of the Kaviyarangams, Political Party daises, and Mines Owner Associations. He had a vivid life which needs to be penned down, which had dramatic turns and ups, downs and ups. He was very passionate about Tamil. He has adopted “Thirumaran” as alias as Thirumarn was the king who carried all the Tamil Literature Leaflets to Madurai safely when an ancient tsunami hit south of current day Kanyakumari, which destroyed the vast land mass of Tamil Kingdoms. Aranthai is the short form for Aranthangi, which is his native.

I am living in Singapore, and got into IT as a profession for my family’s bread & butter.

Now I am writing for Serangoon Times, a monthly Tamil Magazine in Singapore. I can be contacted at jamal[dot]sheik[dot]st[at]gmail[dot]com 

 

என் தந்தை அக்காலத்திய பிரபல நாளிதழ்களின் மாவட்ட முதன்மை நிருபராக இருந்ததாலும், தமிழின் மீது தணியாத்தாகம் கொண்டிருந்ததாலும் நான் புத்தகங்களிடையேயும், வார, மாத இதழ்களின் மத்தியில்தான் வளர்ந்து கொண்டிருந்தேன். எழுத்து என்னைச் சிறுவயதிலிருந்தே அபகரித்துக் கொண்டது. பள்ளி மற்றும் கிளை நூலகம் வழியாக ஏறக்குறைய புத்தகப் புழுவாய்ப் போனேன்.  

என் தாத்தா தமிழின் மீதும் நாட்டுப்புறப்பாடல்களின் மீதும் தீராக் காதல் கொண்டவர். குடும்பச் செலவிற்காக வாரச்சந்தையில் காய்கறி விற்றது போக இருந்த மீதப் பொழுதுகளில் தானே இயற்றி அச்சிட்டு வந்த பாடல்புத்தகங்களை வாரச்சந்தையில் விற்பது வழக்கம். அப்படி விற்கும்போது அந்தப் பாடல்களை உச்சஸ்தாயில் நாட்டுப்புறப் பாடல்களின் நுனி நாதம் சிதையாமல் பாடி விற்பது அவர் வழக்கமாம். என் தந்தைக்கும் அந்தச் சுரம் ஒட்டிக்கொண்டது. ஏழ்மையானக் குடும்பச்சூழலில் ஆறாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி சைக்கிள் மொத்தவிற்பனைக் கடையில் கணக்கப்பிள்ளையாகச் சேர்ந்தார். படிப்புத்தாகம் விடாத காரணத்தால், மண்ணெண்னெய் விளக்குகளில் தமிழ் இலக்கியம் படித்து வரலானார். இலக்குவனார் அப்போது அறந்தாங்கியில் தபால்தந்தி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரிடம் போய் புரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்டு ஏகலைவனாக இலக்கியம் கற்று வந்தார். கவிதை, கதை, என்று பொழுதும் காகிதங்களில் எழுதிக்குவித்து, இலக்குவனார் படித்து தலையாட்டும் தருணத்தை தன் வாழ்னாளின் சாதனையாக மகிழ்ந்தார். 18 வயதிலேயே காரைக்குடியில் கம்பன் விழாவில் மேடையேறி கவியரங்கத்தில் கலந்து கொண்டார். கவிப்பேரரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் அது. கவிப்பேரரசரால் கவிஞர் அறந்தைத் திருமாறன் என்று அழைக்கப்பட்டு தன்னிறைவடைந்தார்.

தாத்தா, தந்தை வழியாக எனக்கும் தமிழார்வம் தொற்றினாலும், பொருள்தேட வேண்டிய சூழலில் எழுத்திற்கென நேரம் ஒதுக்க முடியாமல் போனதில் என்னால் அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலவில்லை. அப்படியும் 2006களில் முதல் முறையாக தமிழ்சார்ந்த இணையத் தளங்கள் தோன்றியபோது எழுத ஆரம்பித்து எனக்கும் எழுத வரும் என்று கண்டேன். பிறகு தொடரவில்லை.

சமீபமாக சிராங்கூன் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் திரு.ஷானவாஸ் அவர்கள் என்னிடம் எழுதுமாறு பணிக்க தற்போது அப்பத்திரிக்கையில் 2021 ஜனவரி முதல் எழுதி வருகிறேன்.